தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற நபர் கைது

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற நபர் கைதுதமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை காவல்துறையின கைது செய்துள்ளனர்.

சென்னை அடையாறு போலீசார் தரமணி 100 அடி சாலை பகுதியில் ஒரு ஓட்டலின் அருகே  சந்தேகப்படும் படி பைக்கில் நீண்ட நேரமாக  நின்றவரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர் வேளச்சேரி சரஸ்வதி நகரைச் சேர்ந்த பெருமாள்  என தெரியவந்தது. அவர்,  தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கேரளாவில் இருந்து வாட்ஸ்அப் மூலம் வாங்கி இங்கு விற்பனை செய்வதும், இவரிடம் லாட்டரி சீட்டுகள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்காக காத்து நின்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார்  2 செல்போன், ரூ.8 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பைக் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்