துப்பாக்கி ஏந்திய போலீசார் விடிய விடிய காவல்

காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்.. துப்பாக்கி ஏந்திய போலீசார் விடிய விடிய காவல்..
விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஒரு பதற்றமான சூழல் நிலவியது. வெவ்வேறு சாதிக்கு இடையிலான காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் விடிய, விடிய துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அபிதா (19), அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (29) ஆகியோர் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வியாழக்கிழமை காதல் ஜோடி பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டது. வியாழக்கிழமை மாலையில், அபிதாவின் தந்தை தனது மகளை காணவில்லை என்று சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
இதனிடையே, காதல் தம்பதியினர் வியாழக்கிழமை காவல் நிலையத்தை அடைந்தனர். அப்போது, போலீசார் அவர்களது பெற்றோர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். அபிதா மற்றும் செல்வகுமாரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் கூடி ஒருவருக்கொருவர் துஷ்பிரயோகம் செய்ய தொடங்கினர்.
மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால் காதல் ஜோடி நள்ளிரவில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டனர். அங்கு காதல் ஜோடியின் பாதுகாப்புக்காக ஆயுதமேந்திய போலீசார் நிறுத்தப்பட்டனர். பின்னர் இந்த காதல் ஜோடி பாதுகாப்பாக பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்கள் செல்வகுமாரின் நண்பருக்கு சொந்தமான வீட்டில் சிறிது காலம் வசிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்