ஓடும் ஆட்டோவில் தங்க செயினை பறித்த இளம்பெண்

ஓடும் ஆட்டோவில் தங்க செயினை பறித்த இளம்பெண்.. பட்டப்பகலில் நடந்த கொள்ளை முயற்சி..
ஓடும் ஆட்டோவில் ஆசிரியையை கீழே தள்ளிவிட்டு 8 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்ற இளம்பெண் மற்றும் ஆட்டோ டிரைவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை பல்லாவரம் அடுத்துள்ள பம்மல் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி. அரசுப் பள்ளி ஆசிரியையான இவருக்கு வயது 45. இவர் பம்மலில் இருந்து ஷேர் ஆட்டோ மூலம் பல்லாவரத்துக்கு சென்று கொண்டிருந்தார். அந்த ஆட்டோவில் சரஸ்வதி தவிர, ஒரு இளம் பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இருந்தனர். 
இந்த நிலையில், பம்மல் மெயின் ரோட்டில் புத்துகோவில் என்ற இடத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, சரஸ்வதியை கடுமையாக தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 8 சவரன் தாலிச்செயினை ஆட்டோவில் வந்த இளம்பெண் பறித்துள்ளார். மேலும், ஓடும் ஆட்டோவில் இருந்து சரஸ்வதியை  கீழே தள்ளி விட்டு, அந்த ஆட்டோ வேகமாகச் சென்றுள்ளது.
இதையடுத்து, ஆசிரியை சரஸ்வதி சத்தம் போட்டு விஷயத்தை கூறியதால், பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து விரட்டிச் சென்று பல்லாவரம் அருகே மடக்கிப்பிடித்தனர். தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், ஆட்டோ டிரைவர் மற்றும் இளம் பெண்ணை சங்கர் நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது பம்மல் நகர் பகுதியைச் சேர்ந்த ரோஸ்மேரி மற்றும் மாங்காட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரசாந்த் என்பதும் தெரியவந்தது. அந்த ஆட்டோவில் உள்ள எண்ணும் போலி எண் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும், பட்டப் பகலில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்