கோவை மாணவி தற்கொலையில் திருப்பம்..!

குளிக்கும் வீடியோ எடுத்து மிரட்டல்.. கோவை மாணவி தற்கொலையில் திருப்பம்..!
கோவை அருகே அடிக்கடி செல்போன் பேசிய மாணவியை பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள வடக்கலூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். 17 வயதான மாணவி, செப்டம்பர் 10ஆம் தேதி வீட்டில் சாணிபவுடர் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
மாணவி அடிக்கடி செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்தால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என முதலில் கூறப்பட்டது.  ஆனால், மாணவியின் தாய் அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வந்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. மாணவி வசித்து வந்த அதே பகுதியில் உள்ள கவுதம் என்ற இளைஞர் மாணவி வீட்டில் குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பாலியல் உறவுக்காக அழைத்துள்ளார்.
மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, சாணிபவுடர் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. கவுதமை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்