ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவர்

ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்.. காதல் மனைவியின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட கணவர் கைது..!
29 வயதான ஒரு நபர், தனது காதல் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டதால் கைது செய்யப்பட்டார். 
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அயனாவரத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் திருமணமாகி கணவரைவிட்டு பிரிந்த நிலையில் தனியார் சமையல் எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். விஜயபாரதி, அந்த பெண்ணை காதலித்து இந்த ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்துகொண்டார். 
இந்த நிலையில், காதல் மனைவியிடம் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கணவர் தொல்லை கொடுத்துள்ளார். அவரை பலமுறை விஜயபாரதி தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண், கணவரின் துன்புறுத்தலை தாங்க முடியாமல் வில்லிவாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜயபாரதி, காதல் மனைவியுடன் இருந்த அந்தரங்க புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். பேஸ்புக்கில் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிட்ட கணவர் மீது, காதல் மனைவி வில்லிவக்கம் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக விஜயபாரதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்