கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm நீக்கம்

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm நீக்கம்.. பணம் பாதுகாப்பாக இருக்கும் என Paytm விளக்கம்..

சூதாட்ட விதிகளை மீறியதற்காக Paytm பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடேட் நிறுவனத்துக்கு சொந்தமான Paytm பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. ஆனாலும், Paytm For Business, Paytm Money. Paytm Mall ஆகிய பிற செயலிகள் அனைத்தும் பிளே ஸ்டோரில் உள்ளன. அதே நேரத்தில் Paytm கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும் கூட ஆப்பிள் ஆப் ஸ்டோரில் Paytm பதிவிறக்கம் செய்ய முடிகிறது. 

இதனிடையே, ஏற்கனவே Paytm பதிவிறக்கம் செய்த வாடிக்கையாளர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என Paytm நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் எனவும் Paytm நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்