சரியான தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி

கிசான் முறைகேடு.. சரியான தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி.. புகார் எண்களை வெளியிட்டது சிபிசிஐடி

கிசான் முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் கிசான் திட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.1.10 கோடி பணம் மோசடி நடந்தது  தெரியவந்துள்ளது. மோசடி நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து, திருவாரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மோசடியில் ஈடுபட்ட பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிசான் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் தகவல் கொடுக்க சிபிசிஐடி புகார் எண்களை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், 044-2851 3500, 2851 2510 மற்றும் 94981 81035 எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கும் தகவல் தெரிவிக்கலாம் என்றும், புகார் அளிக்கும் நபர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சரியான தகவல் தெரிவிப்பவர்களுககு வெகுமதி அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்