தங்க நகை என்று நினைத்து கவரிங் நகையை கொள்ளையடித்த திருடர்கள்

தங்க நகை என்று நினைத்து கவரிங் நகையை கொள்ளையடித்த  திருடர்கள்


சேலத்தில் தங்க நகை என்று என்னி கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் ஒபுலிசாமி என்பவர் வசித்து வருகிறார். ஓட்டல் தொழிலாளியான இவர் வழக்கம் போல நேற்று இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள மணப்பெண்களை அலங்கரிக்கும் 4 செட் கவரிங் நகைகளை தங்க நகைகள் என்று எண்ணி திருடியுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்