பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை..!

ஆன்லைனில் கேம் விளையாடிய கல்லூரி மாணவி.. பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை..!
ஆன்லைனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சென்னை அம்பத்தூர் பழைய எம.டி.எச் சாலையில் வசித்து வரும் ஸ்ரீதரின் மகள் பத்மாவதி. இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கு செப்டம்பர் 24ஆம் தேதி அன்று செமஸ்டர் தேர்வு நடைபெறவுள்ளது. மாணவி பத்மாவதி, செமஸ்டர் தேர்வுக்காக படிக்காமல் செல்போனில் கேம் விளையாடியதாக தெரிகிறது. 
அப்போது, மகள் பத்மாவதியை கேம் விளையாடுவதை தவிர்த்து செமஸ்டர் தேர்வுக்காக படிக்குமாறு பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி பத்மாவதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்