மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்

மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்.. புதுவை பல்லைக்கழகம் அறிவிப்பு..

மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என புதுவை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்வுகள் நடத்த முடியவில்லை. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையல், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு எழுதுவதற்கான தேதியை மாற்றி புதுவை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்றோது செப்டம்பர் 21 முதல் தேர்வு நடைபெறும் என புதுவை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக புதுவை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறுதி பருவத் தேர்வு எழுத ஆன்லைன், ஆப்லைன் என மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று அச்சத்தால் மாணவர்கள் தங்களது புத்தகத்தை பார்த்து என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாணவர்கள் ஏ4 தாளில் தேர்வு எழுதி முடித்துவிட்டு 30 நிமிடங்களுக்குள் ஸ்கேன் செய்து அவர்களது கல்லூரகிளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்