நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தேவையில்லை.. சென்னை ஐகோர்ட்

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. 

நீர் தேர்வு குறித்தும், மாணவர்களின் தற்கொலை குறித்தம் நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், கொரோனா அச்சம் காரணமாக, நீதிமன்றம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களை அச்சமின்றி தேர்வு எழுத உத்தரவிடுகிறது என கூறப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹிக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வலியுறுத்தினார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்தின் கோரிக்கையை நிராகரித்ததுடன், சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முடிவு எடுத்துள்ளது. 

இருப்பினும், "பொது விவகாரங்கள் குறித்து விமர்ச்சிக்கும் போது கவனம் தேவை என்றும், நீதிமன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது" என்றும் நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்