கோவில்பட்டி அருகே விளைநிலத்தில் இறந்து கிடந்த 28 மயில்கள்…

கோவில்பட்டி அருகே விளைநிலத்தில் இறந்து கிடந்த 28 மயில்கள்…

கோவில்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் விளைநிலத்தில் 28 மயில்கள் இறந்து கிடந்தன.

கோவில்பட்டி, இளையரசனேந்தல் அருகே பிள்ளையார்நந்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அந்நிலத்தில் 28 மயில்கள் இறந்து கிடப்பதாக வனச்சரக அலுவலருக்கு தகவக் கிடைத்தது. 

இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த இடத்திற்கு சென்றனர். அங்கு 9 ஆண் மயில்களையும் 19 பெண் மயில்களையும் மீட்டனர். இதனை தொடர்ந்து இளையரசனேந்தல் கால்நடை மருத்துவ அலுவலரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மயில் சோளம் உண்டது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள் அந்த நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து நிலத்தில் விதையை விளைவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்