இனி இ-பாஸ் தேவையில்லை.. கொடைக்கானலுக்கு செல்லலாம்

இனி இ-பாஸ் தேவையில்லை.. கொடைக்கானலுக்கு செல்லலாம்..

இனி கொடைக்கானலுக்கு இ-பாஸ் இன்றி சுற்றுலா செல்லலாம் என சார் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, 5 மாதங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தன. செப்டம்பர் 1 முதல் மால்கள், பூங்காக்கள் அனுமதி அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலமான கொடைக்கானலை சுற்றிப்பார்க்க அம்மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து உத்தரவிட்டார். முதற்கட்டமாக, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவை திறக்கப்படும் என்றும், வெளிமாவட்ட பயணிகளுக்கு இ-பாஸ் தேவை என்றும், உள்மாவட்ட பயணிகள் அடையாள அட்டையுடன் சுற்றுலா செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதிக்கு பேருந்துகளில் இ-பாஸ் இன்றி சுற்றுலா செல்லலாம் என சார் ஆட்சியர் அறிவித்துள்ளார். கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பூங்காவுக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படுவதாகவும், கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா தலங்களும் படிப்படியாக திறக்கப்படும் என்றும் சார் ஆட்சியர் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.09%
 • அனுபவக் குறைவு
  24.56%
 • கிரிக்கெட் அரசியல்
  35.69%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.66%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்