சுண்டைக்காய் தகராறில் ஒருவர் தீக்குளித்த பரிதாபம்

சுண்டைக்காய் தகராறில் ஒருவர் தீக்குளித்த பரிதாபம்.. ஆபத்தான நிலையில் சிகிச்சை..

கள்ளக்குறிச்சி நகரிலுள்ள ராஜா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). அவரது மகள் சினேகா பக்கத்து வீட்டைச் சேர்ந்த கொளஞ்சி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து சுண்டைக்காய்களை பறித்துள்ளார். அப்போது, சுரேஷ் மற்றும் கொளஞ்சி ஆகிய இரு வீட்டார் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுரேஷ் வீட்டுக்கு விருந்தினராக வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கொளஞ்சி வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கொளஞ்சி மகன் வேலு என்பவர், திருவண்ணாமலை சுரேஷை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த சுரேஷ், உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனால் மனமுடைந்த சினேகாவின் தந்தை சுரேஷ் என்பவர் நேற்று மாலை குடிபோதையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சுண்டைக்காய் தகராறில் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.34%
 • இல்லை
  27.93%
 • யோசிக்கலாம்
  4.99%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.74%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்