பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது

பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது.. மகன் சரண் டுவிட்டரில் பதிவு
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 
இந்த நிலையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவரது மகன் சரண் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக இருக்கிறது. இயன்முறை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் ஐசியூ பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைவார் என நம்புகிறோம். எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்