3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது

3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது.. சில கொள்கை முடிவில் பின்வாங்க மாட்டோம்.. அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 
இந்த நிலையில், இது தொடர்பாக கேள்வி ஒன்றுக்கு தமிழக சட்டப் பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அப்போது, 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது என்றும், இதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் மத்திய அரசு எவ்வளவு வலியுறுத்தினாலும் சில கொள்கை முடிவில் பின்வாங்க மாட்டோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்