தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய- மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வளிமண்டல சுழற்சியாக நீடிக்கிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை, வேலூர், கோவை, தருமபுரி, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்