சிறுமிக்கு நிச்சயதார்த்தம் செய்ய முயற்சித்த வழக்கில் 4 பேர் கைது.

சிறுமிக்கு நிச்சயதார்த்தம் செய்ய முயற்சித்த வழக்கில் 4 பேர் கைது.

குழந்தை திருமணங்களை தடுக்க அரசும், அதிகாரிகளும் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்மையால் அதை முழுவதுமாக தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் மதுரை உசிலம்பட்டியில் 29 வயது ஆணுடன் சிறுமிக்கு நிச்சயதார்த்தம் நடத்த முயன்றதாக நான்கு நபர்கள் மீது உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சிறுமியின் பெற்றோர்களான வேலமலைபட்டியைச் சேர்ந்த கே.மலையாண்டி மற்றும் வளர்மதி மற்றும் மணமகனின் பெற்றோர்களான எஸ்.புத்துப்பட்டியைச் சேர்ந்த எம் கணேசன் மற்றும் கோடியம்மாள் ஆகியோருக்கு எதிராக குழந்தை திருமண தடைச்சட்டத்தின் 9 மற்றும் 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிச்சயதார்த்தத்திற்காக இரு குடும்பங்களும் சிறுமியின் வீட்டில் ஒன்றாக இருந்தபோது, காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிச்சயதார்த்தத்தைத் தடுத்தனர். இந்த சம்பவத்தின் போது மண்மகனான பிரேம்குமார் கோயம்புத்தூரில் இருந்ததாகவும், "நிச்சயதார்த்தம் பற்றி அவருக்கு தெரியாது" என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.48%
 • இல்லை
  27.83%
 • யோசிக்கலாம்
  4.97%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.73%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்