3,000 போதை மாத்திரைகள் பறிமுதல்.. இளைஞர் கைது

சென்னை விமான நிலையத்தில் 3,000 போதை மாத்திரைகள் பறிமுதல்.. இளைஞர் ஒருவர் கைது.. சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கக பிரிவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்புவதற்காக வந்த பார்சல் மூலம் போதை மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சரக்கக பிரிவுக்கு சென்ற அதிகாரிகள், அமெரிக்காவின் புளோரிடா மாகாண முகவரிக்கு அனுப்புவதற்கு மருந்துவ பொருட்கள் என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்த பார்சலை பிரித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, போதைக்காக பயன்படுத்தப்படும் மெத்தில்பெனிடெட், சோல்பிடெம் மற்றும் குளோனாசெபம் ஆகிய பெயர்களில் 3,440 மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விமான நிலைய கூரியர் அலுவலகத்துக்கு போதை மாத்திரைகளை அனுப்ப வந்த மொத்த விற்பனையாளரான சென்னையை சேர்ந்த 30 வயது இளைஞரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்