அரசு ஊழியர்களாக அறிவிக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

போக்குவரத்து கழக பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க விஜயகாந்த் வலியுறுத்தல்
போக்குவரத்து கழக பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி அரசு பேருந்து வழித்தடத்தில் போக்குவரத்து இயக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகம் படிப்படியாக தனியார் மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் அரசாணையை ரத்துசெய்துவிட்டு, ஏழை-எளிய மக்களும், குக்கிராமத்தில் வசிக்கும் மக்களும், பள்ளி குழந்தைகளும் பயன்படும் வகையில் தற்போது நஷ்டம் என்ற அறிந்தும் பொதுமக்கள் சேவையில் அரசு போக்குவரத்து கழகம் ஈடுபட்டு வருகிறது. 
இந்த நிலையில் தனியார் மயமாக்கப்பட்டால் லாபமுள்ள வழித்தடங்களில் மட்டும் பேருந்துகளை இயக்குவார்கள். இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் தங்கள் ஊதியம் மற்றும் உரிமைக்காக அவர்கள் ஓய்வுபெறும் சூழலில் பணத்தை திரும்பப் பெறவும் பலகட்ட போராட்டங்கள் நடத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். எனவே மற்ற துறைகள் போன்று பொதுசேவையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து கழக பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்