தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:- வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:- வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆந்திரா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்  உள்ளிட்ட மாவட்டஙகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நிலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், புதுவையில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    63.48%
  • இல்லை
    27.83%
  • யோசிக்கலாம்
    4.97%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.73%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்