நிதி நிறுவனம் நடத்தி ரூ.3, 500 கோடி மோசடியில் ஈடுபட்ட கோவை நபர் கைது…

நிதி நிறுவனம் நடத்தி ரூ.3, 500 கோடி மோசடியில் ஈடுபட்ட கோவை நபர் கைது…

சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி 5 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கவுதம் ரமேஷ் (40) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தமிழகம், கேரளத்தில் 3 இடங்களில் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தார்.

இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் இரட்டிப்பு தொகை தரப்படும் என விளம்பரம் செய்தார். இதை நம்பி பலர் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். சமீபத்தில் அந்த நிறுவனம் மூடப்பட்டது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பலர், சேலம் மாநகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். விசாரணையில் ரூ.5 கோடி வரை மோசடி நடந்தது தெரியவந்தது. இதனிடையே சேலத்தில் தலைமறைவாக இருந்த கவுதம் ரமேஷ் மற்றும் கூட்டாளி பிரவீண்குமார் ஆகியோரை சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

விசாரணையில் கவுதம் ரமேஷ் ஏற்கெனவே கோவை மற்றும் கேரளத்தில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் ரூ.3, 500 கோடி மோசடி செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்