சிறுமியை திருமணம் செய்த இளைஞர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

சிறுமியை திருமணம் செய்த இளைஞர்.. போக்சோ சட்டத்தில் கைது..!
சென்னை தாம்பரம் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நிவேந்திரேன். 23 வயதான இவர், சென்னையை அடுத்த சேலையூர் பகுதியில் தங்கி உணவு விடுதியில் பணியாற்றி வந்துள்ளார். 
இந்த நிலையில், சேலையூர் ராஜகீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் இளைஞர் பழகி வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இளைஞர் நிவேந்திரேன், 16 சிறுமியை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமி மாயமானதால் மனமுடைந்த பெற்றோர், சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதையடுத்து, ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்த இருவரையும் போலீசார் அழைத்து வந்தனர். இளைஞர் நிவேந்திரேனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.48%
 • இல்லை
  27.83%
 • யோசிக்கலாம்
  4.97%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.73%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்