முதன்முதலாக இதய கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை

சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேரில் தென் கிழக்கு - மத்திய கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் முதல் முறையாக பைவென்ட்ரிக்குலார் பெர்லின் இதய கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மூன்று வயது ஆன, வெறும் 10 கிலோ மட்டுமே உடல் எடை கொண்ட ரஷ்யாவைச் சேர்ந்த சிறுவனுக்கு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேரில் பெர்லின் ஹார்ட் எனப்படும் மிகவும் சிக்கலான, இதயத்தின் இரண்டு கீழ் அறைகளுக்கு உதவும் செயற்கை இதய பம்பை பார்த்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் முதல் முறையாக அறுவை சிகிச்சை கடந்த மே மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது,
7 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியல் நிபுணர்கள் ஆன்லைன் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் பார்த்து வழிகாட்டுதல்களை வழங்கினர். கொரோனா பாதிப்பு காரணமாக அவர்கள் இந்தியா வர முடியாத நிலையில் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் ஆலோசனை வழங்கினார்.
இந்த சிக்கலான பைவென்ட்ரிக்குலார் செயற்கை இதயம் பொருத்தும் அறுவைசிகிச்சை தெற்காசியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் எங்கும் நடந்தது இல்லை. முதன்முறையாக சென்னையில்தான் இது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு