16 வயது சிறுமியை கடத்திய இளைஞர் கைது

டிக்- டாக் மோகம்.. 16 வயது சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது..!
மயிலாடுதுறை அருகே டிக்- டாக்கில் மூழ்கியிருந்த 16 வயது சிறுமியை இளைஞர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமி டிக்- டாக் ஆப் மூலம் செல்போனில் பாடுவது, நடனம் ஆடுவது என மூழ்கி கிடந்துள்ளார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை ஊர் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. உடனடியாக சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது, அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலம் பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் என்ற 21 வயது இளைஞர் சிறுமியை கடத்தியது தெரியவந்தது. டிக்- டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்ட சஞ்சய்குமார், தனது நண்பர் உதவியுடன் 16 வயது சிறுமியை கடத்தியது தெரியவந்தது. 
அந்த இளைஞர், சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது. 16 வயது சிறுமியை மீட்ட காவல்துறையினர், சஞ்சய்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை கடத்த உதவிய சஞ்சய்குமார் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.34%
 • இல்லை
  27.93%
 • யோசிக்கலாம்
  4.99%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.74%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்