சென்னையில் கொரோனாவுக்கு 15 பேர் இன்று உயிரிழப்பு

சென்னையில் கொரோனா தொற்றுக்கு 15 பேர் இன்று உயிரிழப்பு
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 15 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 355ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 459ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்தாலும், தினந்தோறும் 100 பேரை தாண்டி பலி எண்ணிக்கை தொட்ட வண்ணம் உள்ளன. 
இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில 15 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்