நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா தொற்று உறுதி!
நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், தற்போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதனையடுத்து, செல்வராசு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்