கொரோனா சிகிச்சை கட்டண விவரங்கள்..!

கொரோனா சிகிச்சை கட்டண விவரங்கள்.. பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் உத்தரவு
கொரோனா சிகிச்சை கட்டண விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டுமென தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களிடம் தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வண்ணம் உள்ளன. இதை அடுத்து, தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கொரோனா சிகிச்சை கட்டண விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில், "கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரங்களை பொதுமக்கள் பார்வைக்காக வைக்க வேண்டும் என்றும், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்