முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை!

வீடுகள், படகுகள் தீக்கிரை..  முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை!
முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட நிலையில், வீடுகள், படகுகள் தீக்கிரையாக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
கடலூர் அருகே தாழங்குடா கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர், குண்டுஉப்பலவாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். தற்போது குண்டுஉப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவராக மதியழகன் மனைவி சாந்தி இருக்கிறார்.
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக மாசிலாமணி தரப்பினர் மற்றும் மதியழகன் தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
உப்பலவாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மாசிலாமணியின் மனைவி பிரவீனாவும், மதியழகன் மனைவி சாந்தியும் போட்டியிட்டனர். இதில், சாந்தி வெற்றி பெற்றார். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில், மாசிலாமணியின் தம்பி மதிவாணன் (வயது 36) நேற்றிரவு கண்டக்காட்டில் இருந்து தாழங்குடாவுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த கும்பல், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. 
மதிவாணன் வெட்டிக் கொல்லப்பட்டதால், ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள், தாழங்குடா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதியழகன் மற்றும் அவரது தரப்புக்குச் சொந்தமான மீன்பிடி படகுகள், வலைகள் மற்றும் கடைகள், கிடங்குகளுக்குத் தீ வைத்தனர். மேலும், மதியழகன் தரப்பினரின் வீடுகளையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இந்த கலவரத்தில் 20க்கும் மேற்பட்ட படகுகள், பல லட்சம் மதிப்பிலான மீன் பிடி வலைகள், 10க்கும் மேற்பட்ட வீடுகள், ஒரு மாருதி வேன், 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. 
வன்முறையை தடுக்க போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதிவாணன் வெட்டிக் கொல்லப்பட்டது மற்றும் வன்முறைகள் குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்