இறைச்சிக்காக ஜல்லிக்கட்டு காளைகள் விற்பனை…

இறைச்சிக்காக ஜல்லிக்கட்டு காளைகள் விற்பனை…

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த வேண்டும் என்று பெரிய போராட்டாமே நடைபெற்றது. 

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் உள்ள பல விவசாயிகள், தங்கள் ஆசையாகவும் பாசமாகவும் வளர்த்த ஜல்லிக்கட்டு காளைகளை பராமரிக்க முடியாததால், சில சமயங்களில் இறைச்சிக்காக கூட தங்கள் மதிப்புமிக்க காளைகளை விற்பனை செய்கின்றனர். 

கடந்த சில நாட்களில் அரியலூரில் மட்டும் 500 காளைகள் இறைச்சிக்காக விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்