தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பிய தமிழக அரசு

கொரோனா சிகிச்சை அளிக்க ரூ.16 லட்சம் கட்டணம்.. தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பிய தமிழக அரசு!
கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதை சனிக்கிழமை முதல் நிறுத்துமாறு மருத்துவ சேவை இயக்குநரகம் (டி.எம்.எஸ்) கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை கேட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் ஜூன் 5ஆம் தேதி முதல் அரசின் உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அதாவது மாநில அரசின் காப்பீடு மற்றும் பொது மக்களுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொது மக்கள் (காப்பீடு இல்லாதவர்கள்) ஒரு நாளைக்கு ரூ.5,000 மற்றும் சிக்கலான நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.9,000, ஐ.சி.யுவில் சிகிச்சை பெற ரூ.9,000 முதல் ரூ.15,000 வரை வசூலிக்க முடியும் தமிழக சுகாதாரத் துறை குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை கொரோனா நோயாளியிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. லேசான அறிகுறியுடன் இருந்த கொரோனா நோயாளி ஜூலை 13 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜூலை 29 வரை சிகிச்சை பெற்றார். 
"புதன்கிழமை அன்று, சிக்கல்கள் மற்றும் செலவு அதிகரித்தபோது, ​​நோயாளியின் குடும்பம் நோயாளியை வேறொரு மருத்துவமனைக்கு மாற்ற விரும்பியது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பு மீத தொகையை செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் நோயாளியின் குடும்பத்தினரை கேட்டுக்கொண்டுள்ளது.
நோயாளிக்கு ஆரம்பத்தில் ரூ.16 லட்சம் பில் வழங்கப்பட்டது. பின்னர் மருத்துவமனை நிர்வாகம் ரூ.4 லட்சம் தள்ளுபடி அளித்ததுடன், குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது" என்று டி.எம்.எஸ் கண்காணிப்பாளர் கமலகண்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணையில், அரசு நிர்ணயித்த தொகையை மீறி பில்களை செலுத்த தனியார் மருத்துவமனை கேட்டுக்கொண்டுள்ளது. ஒரு நோயாளிக்கு ஆரம்பத்தில் ரூ.16 லட்சம் வழங்கிய மருத்துவமனை, அடுத்த சில நாட்களில் அதிகப்படியான தொகையை கட்ட வலியுறுத்தியதற்கு விளக்கம் அளிக்குமாறு  மருத்துவ சேவை இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்