பெட்ரோல் குண்டு வீசிய கல்லூரி மாணவன் கைது!

அடுக்குமாடி குடியிருப்பில் பெட்ரோல் குண்டு வீசிய கல்லூரி மாணவன் கைது..!
அடுக்குமாடி குடியிருப்பில் பெட்ரோல் குண்டு வீசிய கல்லூரி மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
சென்னை பல்லாவரம் பி.வி. வைத்தியலிங்கம் சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் விஜயகுமார் என்ற 25 வயது இளைஞர் வாடகை எடுத்து தங்கியுள்ளார். அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  
இவர், நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு வந்துள்ளார். 
அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டிகளிடம், எனது நண்பர்கள் வருவார்கள், அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். செக்யூரிட்டிகள் அனுமதி மறுத்ததால், அவர்களிடம் விஜயகுமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். காவலாளிகளிடம் ஆபாசமாக பேசி, சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளார். 
இதனை கண்ட குடியிருப்புவாசிகள், விஜயகுமாரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், ஆத்திரம் அடைந்த விஜயகுமார், தனது அறையில் இருந்து மூன்று பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி அதில் (ஆட்டோ பாம்) எனப்படும் பட்டாசை கொளுத்தி மேலிருந்து கீழே வீசி வெடிக்க வைத்துள்ளார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்த நேரத்தில், வீட்டின் கீழே குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த ஒரு பெண்ணும், குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பயங்கர சத்தம் கேட்டு, குடியிருப்பில் இருந்த அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே வந்து பார்த்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பல்லாவரம் போலீசார், விஜயகுமார் அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் தலைமறைவானது தெரிய வந்தது. அவர் தங்கியிருந்த அறையில் 15க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில், அவரது இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த விஜயகுமாரை மீட்ட போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்