N95 மாஸ்க் இறக்குமதி செய்வதாக டாக்டரிடம் ரூ.2 கோடி மோசடி

N95 மாஸ்க் இறக்குமதி செய்வதாக மதுரை டாக்டரிடம் ரூ.2 கோடி மோசடி..வெளிநாட்டு நிறுவனங்கள் மீது வழக்கு..!
N95 மாஸ்க் இறக்குமதி செய்வதாக கூறி, மதுரை மருத்துவரிடம் சுமார் ரூ.2 கோடி மோசடி செய்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்தவர் டாக்டர் சந்திரமோகன். அப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் இவர், N95 மாஸ்க் வாங்க இணையதளம் மூலம் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் கடந்த ஜூன் மாதம் 5 லட்சம் மாஸ்க் தேவை என ஆர்டர் கொடுத்துள்ளார். இதன் மதிப்பு ரூ.2.25 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டு, முன்பணமாக ரூ.1.60 கோடியை வழங்கியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நிறுவனம், மாஸ்க் வழங்காமல் ஏமாற்றியுள்ளது.
இதுகுறித்து டாக்டர் சந்திரமோகன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் நேற்று அந்த நிறுவனத்தின் விற்பனை பிரிவைச் சேர்ந்த பேட்ரிக் வேன் டிக், மேலாளர் டாக்டர் பீட்டர் பாத் மற்றும் அதன் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
இதேபோல், கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தில் 2 லட்சம் மாஸ்க் வாங்க ஒப்பந்தம் செய்த டாக்கா, முதற்கட்டமாக ரூ.90.65 லட்சத்தை முன் பணமாக செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நிறுவனமும், மாஸ்க் வழங்காமல் மோசடி செய்துள்ளது.
இதுகுறித்து புகாரின்பேரில் கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் சூரியநாராயணன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்