தஞ்சையில் பலரது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு!

தஞ்சையில் பலரது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு..! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!
தஞ்சை மாவட்டத்தில் பலரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
தஞ்சை மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சிலரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர்கள் பணம் எடுக்காமலேயே ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் 100 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 கோடி வரை மோசடி நடந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சிலர், வங்கிக்கு சென்று  கேட்டுள்ளனர். எங்களுக்கு எதுவும் தெரியாது என அதிகாரிகள் கைவிரித்துள்ளனர். இதையடுத்து  பாதிக்கப்பட்டவர்கள், எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 
இதேபோல் கடந்த வாரத்தில் அதிராம்பட்டினத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ரூ.3 கோடி வரை பணம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி சம்பவம் தஞ்சை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்