சிறுமிக்கு பாலியல் தொல்லை..! இளைஞர் சிறையில் அடைப்பு!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை..! இளைஞர் சிறையில் அடைப்பு!!
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பணகுடி கோயில் விளையைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ் (வயது 21). இவர் அதே பகுதியில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இளைஞர் மாணிக்கராஜ், பக்கத்து தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் சொல்லி கதறியுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்