வேல் வரைந்து கந்தசஷ்டி கவசம் அவமதிப்பு எதிர்த்து போராட்டம்…

வேல் வரைந்து கந்தசஷ்டி கவசம் அவமதிப்பு எதிர்த்து போராட்டம்…

கந்தசஷ்டி கவசம் அவமதிப்பை எதிர்த்து பொதுமக்கள் வீடுகளில் வேல் வரைந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

சமீபத்தில் கந்தகஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசப்பட்டது.இது தொடர்பாக போலீஸார் சிலரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து இதனால் இந்து மக்கள் புண்பட்டுள்ளதாக பலதரப்பில் கூறப்படுகிறது. 

இதற்கிடையே வீடுகளில் வேல் வரைந்து வழிபாடு செய்ய பா.ஜ., மாநில தலைவர் முருகன் வலியுறுத்தினார். அத்துடன் பழநியில் பக்தர்கள் பலர் வீடுகளில் வேல் வரைந்து கோலமிட்டதுடன், கந்த கஷ்டியை பாராயணம் செய்தனர். 

இதே போல வடமதுரை பக்தர்களும் ஓவியர்களை வேலைக்கு அமர்த்தி வீடுகளில் வேல் வரைந்தனர். இதுகுறித்து, அண்ணா நகர் பக்தர் பெருமாள் கூறுகையில்” கந்தசஷ்டி கவசத்தை அவமதித்த கருப்பர் கூட்டத்தை பின்னால் இருந்து இயக்கும் கட்சியினரை கண்டிக்கிறோம், எங்கள் மனம் மிகவும் புண்பட்டதால் வீடுகளில் வேல் வரைகிறோம். இதனால் மனதில் எழுச்சி ஏற்படுகிறது. 

இந்த எழுச்சியை பார்த்து ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி, தங்கள் அமைப்பு வாழ்க்கையை முன்னேற்ற நினைப்பவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்வார்கள் என நம்புகிறேன்” என்று கூறினார். 

மேலும் ஊட்டி இளையபாரதம் அமைப்பின் தலைவர் சரவணனின் தலைமையில் கந்த சஷ்டி கவசம் பெருமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊட்டி நகரில் உள்ள ஹிந்துக்கள் வீடுகள் மற்றும் கடைகளில் கந்த சஷ்டி கவச விழிப்புணர்வு படங்களை ஒட்டி வருகிறார்கள்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்