சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 81ஆக குறைவு!
சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 81ஆக குறைந்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் குறைகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 188 பகுதிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு உள்ள இடத்தில் 14 நாட்களுக்கு புதிய தொற்று ஏற்படவில்லை என்றால் 'சீல்' அகற்றப்படுகிறது. அந்த வகையில் 107 பகுதிகளில் சீல் அகற்றப்பட்டு, அங்கு இயல்புநிலை திரும்பியுள்ளது.
தற்போது தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஒரு தெருவுக்கும், திரு.வி.க நகர் மண்டலத்தில் 9 பகுதிகள், அம்பத்தூர் மண்டலத்தில் 8 பகுதிகள், அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 27 பகுதிகள் உள்பட மொத்தம் 81 பகுதிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த ராயபுரம் மண்டலத்தில், தற்போது ஒரு தெரு கூட கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.