தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: தேர்தல் ஆணையம்..
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை இடங்களுக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் காலமானதால் இரண்டு தொகுதிகளும் காலியாக உள்ளதாக கடந்த பிப்ரவரி 27 மற்றும் 28ஆம் தேதிகளில் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஆகஸ்ட் 26 மற்றும் 27ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும்.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதால் மக்கள் நலன் கருதி, தற்போது தமிமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த இயலாது. செப்டம்பர் 2வது வாரம் வரை தேர்தல் நடத்த இயலாது. அதன்பின் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது.