சென்னை தரமணி பகுதியில் அரிசி கடை நடத்தி வரும் சந்திரன் என்பவரின் கடைக்கு, 2 இளைஞர்கள் அரிசி வாங்க சென்றுள்ளனர். அப்போது, பச்சரிசி, பிரியாணி அரிசியை எடுத்து காட்டுங்கள் என்று கேட்டுள்ளனர். ஒவ்வொரு அரிசியாக சந்திரன் எடுத்து காட்ட, இது நல்லா இல்லை, வேறு அரிசி காட்டுங்கள் என்று கூறியுள்ளனர். அரிசி வகைகளை பார்த்துவிட்டு 3 அரிசி மூட்டைகளை எடுத்து வையுங்கள். ஏ.டி.எம்.மில் சென்று பணத்தை கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டனர்.