பேராவூரணி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி!
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் பேராவூராணி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என இதுவரை 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.