குழந்தை தொழிலாளர்களாக இருந்து தற்போது +2 பொதுத்தேர்வில் சாதித்து காட்டிய மாணவர்கள்..
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எஸ்.தரணி தனது வாழ்க்கை எப்படி இருந்தது என்று திரும்பிப் பார்க்கும்போது, தனக்கு ஒரு சரியான பள்ளிப்படிப்பு கிடைத்தது மட்டுமல்லாமல், பன்னிரெண்டாம் வகுப்பில் 378 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதை அவர்களால் இன்னும் நம்ப முடியவில்லை.
தரணி மேலகுளம்புதூர் கிராமத்தில் நெசவாளர்களின் குடும்பத்தில் பிறந்தவர். எட்டு வயதில், குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் நிலையில் சிக்கிக்கொண்டார். ஆனால் அதிர்ஷ்ட வசமாக தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் (என்.சி.எல்.பி) தன்னார்வலர்கள் சோதனைக்கு வந்துபோது தரணியை மீட்டனர்.
அவர்கள் தரணியை ஒரு சிறப்பு பள்ளியில் சேர்த்தார்கள். மீட்கப்பட்ட பின்னரும் அவளுக்கு வாழ்க்கை சுலபமாக இருக்கவில்லை. தரணிக்கு எதிராக முரண்பாடுகள் அடுக்கி வைக்கப்பட்டன. அனைவரையும் சமாளித்து, பள்ளிப்படிப்பை முடித்து இப்போது, சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சாதிப்பதே அவரது லட்சியமாக வைத்துள்ளார்.
இதேபோல் தான் “மாவட்ட ஆட்சியர் ஆவது எனது லட்சியம். ஆனால், நான் கல்லூரியில் கணினி அறிவியல் பொறியியல் படிக்க விரும்புகிறேன். ” என குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்ட எஸ்.இ.கோகுலும் தெரிவித்துள்ளார். அவர் 389 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். விண்வெளி விஞ்ஞானியாக மாற விரும்புகிறார். அவர் பேரணாம்பட்டில் 2014 வரை பீடி தயாரிக்கும் ஆலையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
எஸ்.இ.கோகுல் நடக்கக் கற்றுக்கொள்வதற்கு முன்பே தந்தையை இழந்தவர். அதன்பிறகு பீடி தொழிற்சாலையில் பணிபுரிந்துள்ளார். தனது அம்மாவும், சகோதரியும் அத்தை பராமரிப்பில் தங்கியிருந்தார்கள் என அவர் கூறியுள்ளார்.
இதுபோன்று "குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட சுமார் 19 குழந்தைகள், இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில், 17 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்" என்கிறார் என்.சி.எல்.பி திட்ட இயக்குநர் எம்.ராஜபாண்டியன்.
பெரிய மாற்றங்கள் சிறிய படிகளுடன் தொடங்குகின்றன. உண்மையில், இந்த 17 மாணவர்களும் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத எதிர்காலத்தை நோக்கிய சிறிய படிகளாக இருக்கலாம். ஏழ்மையின் சிக்கி தவித்து தற்போது சாதித்து காட்டியிருக்கும் இவர்கள் உண்மையில் ஹீரோக்கள் தான்.