மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு!
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இன்று மதியம் 2 மணி முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 2,060 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை யாரும் உயிரிழக்காத நிலையில், 1,418 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 642 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.