திருப்பத்தூர்: வாகன சோதனையில் சிக்கிய பலே திருடர்கள் - 17 பைக்குகள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் பலே திருடர்கள் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 17 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், உமராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் ஆம்பூர் மற்றும் உமராபாத் பகுதிகளில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர்.

அப்போது ஆம்பூர் புறவழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் பேர்ணாம்பட் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் அலீம் என்பதும், இருவரும் ஆம்பூர் மற்றும் உமராபாத் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுபட்டதும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரியவந்தது.

இதன் பின்னர் இருவரையும் ஆம்பூர் நகர காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 17 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com