கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

ஆவடி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய இரண்டு தொழிலாளிகள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு
விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேர்
விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேர்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மத்திய அரசு ஓ.சி.எப் குடியிருப்பு பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் பலர் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மோசஸ் (45) மற்றும் தேவன் (46) ஆகிய 2 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கியுள்ளனர். சிறிது நேரத்தில் இருவரையும் விஷவாயுத் தாக்கியுள்ளது, அதில் இருவரும் துடி துடித்துள்ளனர்.

விஷவாயு தாக்கிய இருவரை மீட்கும் தீயணைப்பு துறையினர்
விஷவாயு தாக்கிய இருவரை மீட்கும் தீயணைப்பு துறையினர்

இதை அறிந்ததும் ஆவடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தேவன், மோசஸ் இருவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்கு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்து விட்டனர்.

விஷவாயு தாக்கி தொடரும் இது போன்ற உயிரிழப்புகள் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com