நெல்லையில் ஆற்றில் மூழ்கி காவலர் உள்ளிட்ட 2 பேர் பலி - என்ன நடந்தது?

ஆற்றில் குளித்தபோது, திவ்யா, ராகுல், ஸ்ரீகணேஷ் ஆகிய 3 பேர் மூழ்கியதாக கூறப்படுகிறது
நெல்லையில் ஆற்றில் மூழ்கி காவலர் உள்ளிட்ட 2 பேர் பலி - என்ன நடந்தது?

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் காவலர் உள்ளிட்ட 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றிற்கு நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து குளிப்பது வழக்கம்.

இந்த நிலையில், சங்கரன்கோவில் அருகேயுள்ள திருப்புடைமருதூரைச் சேர்ந்த பரமசிவன் அவரது மனைவி திவ்யா (32), கல்லூரி மாணவரான செல்வராஜ் மகன் ராகுல் (25), சண்முகவேல் மகன் ஸ்ரீ கணேஷ் உள்பட சுமார் 8 பேர் குளிக்க சென்றுள்ளனர்.

தொடர்ந்து ஆற்றில் குளித்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதில், திவ்யா, ராகுல், ஸ்ரீகணேஷ் ஆகிய 3 பேர் மூழ்கியதாக கூறப்படுகிறது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீ கணேஷ் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும் திவ்யா மற்றும் ராகுல் இருவரும் ஆற்றில் மூழ்கி மாயமானார்கள்.

இது குறித்து தகவலறிந்து வந்த அம்பை மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினர் அவர்கள் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சிறிது தூரத்தில் திவ்யா மற்றும் ராகுல் ஆகியோர் ஆற்றில் சடலமாக மிதந்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அவர்கள் இருவரது உடலையும் மீட்டனர்.

மேலும், இது குறித்து, வழக்குப்பதிவு செய்த வீரவநல்லூர் போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில், ஆற்றில் மூழ்கி இறந்த திவ்யாவின் கணவர் பரமசிவன் கரிவலம்வந்த நல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என தெரிய வந்துள்ளது. மேலும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com