திருப்பத்தூர்: 2 குடிசைகள் தீக்கிரை - நகை, பணம் நாசம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 2 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
தீயில் கருகிய வீடு
தீயில் கருகிய வீடு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி புதூர் ஏரிக்கரை பகுதியில் வசிப்பவர்கள் விசாலாட்சி மற்றும் சரஸ்வதி. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இன்று இருவரும் வெளியில் சென்றிருந்த நிலையில் திடீரென 2 குடிசை வீடுகளும் ‌தீப்பற்றி எரிந்துள்ளது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றும் முடியாததால் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்‌.

அதற்குள் 2 வீடுகளிலும் இருந்த ஃபேன், மிக்ஸி, பீரோவில் இருந்த 4 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம், பள்ளி சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீக்கிரையாகின.

இதுகுறித்த புகாரின்பேரில் வாணியம்பாடி நகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, தீ விபத்து ஏற்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். பின்னர், மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் தீப்பற்ற வைத்தார்களா? என, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com