14 வயது சிறுமி முள் காட்டில் எரித்த கொடூரம்…

14 வயது சிறுமி முள் காட்டில் எரித்த கொடூரம்…

திருச்சி அருகே 14 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் எட்டரை அருகே அதவத்தூர்பாளையம் கிராமத்தில் பெரியசாமி என்பவரின் மகள் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த பகுதியில் சரியான கழிப்பிட வசதி இல்லை. பொதுக்கழிப்பிடமும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அச்சிறுமி நேற்று மதியம் வீட்டு பக்கம் இருக்கும் முள் காட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், பெற்றோர் தேடத் தொடங்கியுள்ளனர். அப்போது, முட்புதர் ஒன்றில் எரிந்த நிலையில் சிறுமி சடலமாக கிடந்ததை கண்டு பெற்றோரும் கிராம மக்களும் அதிர்ச்சியடைந்தனர். 

தகவல் அறிந்து அங்கு விரைந்த சோமரசன்பேட்டை காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாவட்ட எஸ்.பி மற்றும் டிஐஜி ஆனி விஜயா உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்