நாம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சாக தகுதியுடையவர்கள் தான்.. வரலட்சுமி சரத்குமார் காட்டம்

நாம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சாக தகுதியுடையவர்கள் தான்.. வரலட்சுமி சரத்குமார் காட்டம்
நாம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சாக தகுதியுடையவர்கள் தான்.. வரலட்சுமி சரத்குமார் காட்டம்

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

 அந்த பதிவில் 'இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? மற்றும் ஒரு குழந்தையை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட உலகில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் நாம் அனைவரும் குரல் வைரஸால் பாதிக்கப்பட்டு சாக தகுதியானவர்கள்தான்...

 அதுதான் மனிதர்களாகிய நமக்கு  

 கடவுளின் பதிலாகவும் இருக்கும்... அவரின் பார்வையில் நாம் அனைவரும் வாழ தகுதியற்றவர்கள்...' என்று ஆதங்கமாக பதிவிட்டுள்ளார்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com