சாத்தான்குளம் கொலை வழக்கு... கைது மட்டுமே தீர்வல்ல..

சாத்தான்குளம் கொலை வழக்கு... கைது மட்டுமே தீர்வல்ல..

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் என இருவர் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறி்த்து தமிழர் வீர விளைய

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் என இருவர் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் அக்கழகத்தின் மாநில தலைவர் T.ராஜேஷ் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
அந்த அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகதனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகு, காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் கண் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அதிர்ச்சியளிக்கிறது!  மேலும், இக்கொடிய சம்பவம் மிகவும் ஒரு சில காவலர்கள் இது போன்று நடந்து கொள்ளும் பட்சத்தில் ஒட்டுமொத்த காவல்துறையின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. 
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்திருப்பதும், சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் மட்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வல்ல என்றும்  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
மேலும், கடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், பாமர மக்களுக்கு எதிரான தொடர் அநீதிகள் இது போன்று நடக்கும் பட்சத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறுகள் செய்யும் போது கைது என்பது கண்துடைப்பு நடவடிக்கையாக மட்டுமில்லாமல் மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று  தமிழ்நாடு வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com