கொரோனாவுக்கு காவல்துறையில் மேலும் ஒரு பலி

கொரோனாவுக்கு காவல்துறையில் மேலும் ஒரு உயிரிழப்பு!
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
சென்னை காவல்துறையில் ஏற்கனவே கொரோனாவால் 1,155 பேர் பாதிக்கப்பட்டு 462 பேர் குணமடைந்துள்ளனர். ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி மாம்பலம் ஆய்வாளர் பாலமுரளி உயிரிழந்த நிலையில், இன்று காவல்துறையில் மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 57 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.66%
  • தவறான முடிவு
    20.51%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.86%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    7.97%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்